நிழலாய் நீ என் அருகில்
இருக்கும் வரையில் நித்தம்
நானும் புதிதாய் பிறந்தேன்..
நீங்கி நீயும் சென்ற
பின்னே கருகிக் கரையும்
மெழுகாய் ஆனேன்..
இரவுகளைக் கொன்று
கனவுகளில் கதை பேசிடும்
நேரங்களில் நடுநிசியில்
மலரும் மலராய் இருந்தேன்...
கரம் விட்டு நீயும் காதல்
கொண்டு சென்ற பின்னே
தலையணை நனைத்திடும்
கண்ணீராய் ஆனேன்..
உன் அருகில் இருக்கும்
பொழுதுகள் அனைத்தும்
விண்ணில் பறந்திடும்
பறவையாய் இருந்தேன்..
நீ விட்டு விலகிச் சென்ற
பின்னே ஊமை கானம்
இசைக்கும் கவிதைகளாய்
ஆனேன்..
உன்னை அனுதினம்
ரசித்து மகிழ்ந்திடும்
ரசிகையாய் இருந்தேன்..
தொலைதூரம் நீயும்
தொலைவாகிப் போன
பின்னே தனிமையில்
காயும் சருகாய் ஆனேன்...
தினம் உன்னை எண்ணித்
தேய்கின்ற நிலவாயும்
ஆனேன்...