நலமா நீ....யாரிடம் கேட்பேன்
உன் மீதான என் உணர்வுக்கு என்னவென்று பெயர் வைப்பேன்
என் தேடலின் பொருளாய் நீ
என் விரல்களின் கவிதை நீ
என் எண்ணமும் எழுத்தும் நீ
என் ஏக்கம் நீ
என் தவிப்பும் நீ
என்னுள் எல்லாமுமாய் நீ
என் விழி அறியா ஓவியமாய் நீ
என்று காண்பேன் உன்னை..
என் எண்ணங்களை மட்டுமே தூது அனுப்பி உள்ளேன்...
அதன் வலுகொண்டு உன்னை சேர்வேனா????