Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

காதல் காதல் காதல்

உன்னோடு அனுதினம்
பேசினால்தான்
காதலா ??
உன்னை தினம் ஒருமுறை 
முத்தமிடுவதுதான் 
காதலா ??
உன்னோடு
செல்ல சண்டை போட்டால்தான்
காதலா ??
உன்னை
நேரில் பார்த்தால்தான்
காதலா ??
உன்னோடு
இணையத்தில்
இரவு பகல் பேசினால்தான்
காதலா ??
உனக்காக
கவிதை எழுதினால்தான்
காதலா ??
உன்னோடு
பேசும் போது அடிக்கடி
உன் பெயரை சொன்னால்தான்
காதலா ??
இல்லை,......
கண்ணே,மணியே ,செல்லம், குட்டி ,புஜ்ஜி ,
தங்கம் ,
என்று கொஞ்சினால்தான்
காதலா ??
இது இல்லை காதல்
இவை
அனைத்திற்கும் சொந்தமான
நீ இப்போது
என்னோடு இல்லையே
என்று
நிமிடம்தோறும்
உன்னை
நினைத்து உருகி சாவுறேன் பாரு
இதுதான் டி காதல் !!!
உன் நினைவுகள் மட்டும் போதும்
என் உயிர் வாழ,,,,
-Mr K