என் பாதைகளின்
நடுவே பயணம் நீ.....
என் வார்த்தைகளின்
நடுவே வண்ணம் நீ............
என் கிறுக்கல்களின்
நடுவே கீதம் நீ...........
என் உளறல்களின்
நடுவே உரையாடல் நீ..........
என் கஷ்டங்களின்
நடுவே இஷ்டம் நீ........
என் துன்பங்களின்
நடுவே இன்பம் நீ.........
என் காயங்களின்
நடுவே மாயம் நீ...........
என் வலிகளின்
நடுவே வாழ்கை நீ...........
அதனால் என் சுவாசம்
இன்றளவும் வாழ்கிறது.............