எத்தனை இரவுகள் உறக்கம் தவிர்த்து
உன் நினைவோடு விழித்திருக்கிறேன்
இந்த விடியலில்
உன் பார்வை என் மீது
படாதா என்று !
இந்த விடியலில்
உன் இதழ்கள்
ஒற்றை வார்த்தை உதிர்க்காதா
என்று !
இந்த விடியலில்
என் மீது காதல் வராதா என்று !
இந்த விடியலில்
உன் நினைவில் நான் சேர்வேனா என்று !
உறங்காத என் இரவுகள் ஒவ்வரு நாளும்
என்னை கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது !
ஒவ்வ்ரு விடியலும் விடிந்து கொண்டுதான் இருக்கிறது
உன்னில் தான் எந்த ஒரு
விடியலும் இல்லை !
உனக்குள் நான் வருவதற்கான
விதியும் இல்லை !
-Mr.K