காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
ஓ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
ஓ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது
இதில் உனது எனது எனப் பிரிவேது
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா…
அன்பே வா…💖💖💖